உள்நாட்டு செய்தி
பெண்ணின் கழுத்திலிருந்த தங்க நகையை திருடிச் சென்றவர் உயிரிழப்பு..!
பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் ஒருவர்,
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் பாணந்துறை பகுதியில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச்சென்றபோது,
அங்கிருந்த சிலர் அவரை மடக்கிப் பிடித்து கடுமையாக தாக்கி பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபர் கடுமையான தாக்கப்பட்டதால் பொலிஸார் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.