உள்நாட்டு செய்தி
கொழும்பில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தளை நீர் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.