முக்கிய செய்தி
யாழ். இளைஞன் லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
யாழினை சேர்ந்த இளைஞரொருவர் லண்டனில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தென்மேற்கு லண்டனில் ட்விகன்ஹாமில் உள்ள தொடருந்து நிலையத்தில் இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்று (11.01.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், காரைநகரை பூர்வீகமாக கொண்ட அஜந்தன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நால்வர் கைது
லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வீடு திரும்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது உடனடியாக செயற்பட்ட தொடருந்து நிலைய ஊழியர்கள் இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட 4 பேரை பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கொலை தொடர்பில் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு ஆண்களும், 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.