Connect with us

முக்கிய செய்தி

கோதுமை மா விலையில் மாற்றம் இல்லை -இறக்குமதியாளர்கள்

Published

on

 

நாட்டிற்கு தேவையான கோதுமை மாவை வழங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரண்டிப் ஃப்ளோர் மில்ஸ் மற்றும் பிரிமா சிலோன் லிமிடெட், தங்களிடம் ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்கள் இருப்பதாகவும், எனவே எதிர்காலத்தில் விலை உயர்வு ஏதுமின்றி விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளன.

செங்கடலில் தற்போது நிலவும் பதற்றம் காரணமாக கப்பல் கட்டணத்திற்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் கூறியதை அடுத்து உள்நாட்டில் அரைக்க கோதுமை தானியத்தை இறக்குமதி செய்யும் இரண்டு முக்கிய விநியோகஸ்த்தர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், உள்ளூர் சந்தைக்கான விநியோகத்தின் பெரும்பகுதிக்கு பொறுப்பான இரண்டு நிறுவனங்களும் சமீபத்திய நெருக்கடியின் போதும் கோதுமை தானியங்கள் மற்றும் கோதுமை மாவை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளன.

செங்கடலில் நிலவும் பதற்றம் காரணமாக உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள சமீபத்திய இடையூறுகள் மற்றும் அதன் விளைவாக சரக்குக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், இந்த நிறுவனங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் உணவுப் பாதுகாப்பையும் கோதுமை மாவின் விலை ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த விரும்புகின்றன.

“பொறுப்புமிக்க பெருநிறுவன பிரஜைகள் என்ற வகையில், எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகள் இருந்தபோதிலும், இலங்கைக்கான பிரதான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே, எங்கள் வசதியான இடையகங்கள் மற்றும் பயனுள்ள இடர் முகாமைத்துவ உத்திகள் காரணமாக கோதுமை மாவின் விலை அப்படியே இருக்கும்” என இரு நிறுவனங்களும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *