முக்கிய செய்தி
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி வாழ்த்துக்கள்
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ஷேக் ஹசீனாவிற்கு,( Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது அறிவும், அனுபவமும், பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.