முக்கிய செய்தி
புதைக்கப்பட்ட யுவதியின் சடலம் மர்மமான முறையில் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு..!
இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட யுவதி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் வெளியே இருந்த சம்பவம் ஒன்று பண்டாரவளை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
பண்டாரவளை, படலுகஸ்தன்ன பிரதேசத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அந்தப் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த புதன்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் வியாழன் அன்று அப்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டு யுவதியின் உடலை அடக்கம் செய்தனர்.
யுவதியின் தந்தை, யுவதியின் மரண சடங்கு சம்பிரதாய தேவைக்காக பக்கத்து வீட்டுக்குச் சென்றபோது, அவள் புதைக்கப்பட்ட கல்லறைக்கும் சென்றுள்ளார்.
நெஞ்சை உலுக்கும் காட்சி அங்கு காணப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த மகளின் சடலத்தை கண்ட யுவதியின் தந்தை, அயலவர்களிடம் இதுபற்றி அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, சடலத்தை யாரேனும் தோண்டி எடுத்து துஷ்பிரயோகம் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அதற்காக சந்தேகநபர் பக்கத்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகே உள்ள சவல்,
அதே வீட்டிலுள்ள மண்வெட்டியையும் பயன்படுத்தி குழியில் மண்ணை அகற்றி புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலம் பண்டாரவளை குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் பண்டாரவளை பதில் நீதவான் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.