உள்நாட்டு செய்தி
அமெரிக்க குடியுரிமையை கைவிடும் பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அமெரிக்க குடியுரிமை அந்தஸ்தை நீக்கும் நோக்கில் அவர் வரவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி ஜனாதிபதி வேட்பாளர் பசில் ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்ச என அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இது தொடர்பான இறுதி முடிவை கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.