முக்கிய செய்தி
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பதிவுகள் ஆரம்பமாகின
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கான வாக்காளர் பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.
தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக தேர்தல்கள் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.