முக்கிய செய்தி
2024ல் தண்ணீர் கட்டணம் உயரும்
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% உயரும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
ஜனவரி 1ஆம் திகதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) காரணமாக இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
VAT (திருத்தம்) டிசம்பர் 11 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, வரி 15% இல் இருந்து 18% ஆக அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது .
இதன் விளைவாக, புதிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தண்ணீர் கட்டணத்தில் இந்த மாற்றத்தை ஏற்படுத்த NWSDB முடிவு செய்துள்ளது.