உள்நாட்டு செய்தி
நீர் கட்டண நிலுவைத் தொகை 12 பில்லியன் ரூபா !
நீர் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால், நீர் கட்டண நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபாவாக உள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் பியால் பத்மநாத கஜதீரஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நீர் கட்டணத்தை உடனுக்குடன் செலுத்துவதன் மூலம் நீர் இணைப்பு துண்டிக்கப்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.