முக்கிய செய்தி
2018க்குப் பின்னர் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இவ்வாண்டு சிகிரியாவுக்கு வருகை
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த ஆண்டு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சீகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக சிகிரியா திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த வருடம் சீகிரியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களாவர்.
சிகிரியாவை பார்வையிட வந்த ஏனைய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மத்திய கலாசார நிதியம் வழங்கும் என திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் 30 அமெரிக்க டொலர் பயணச்சீட்டுகளின் ஊடாக 225,000 அமெரிக்க டொலர்களை சிகிரியா திட்டம் ஈட்டியுள்ளது. உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.100 வசூலிக்கப்படுகிறது. சிகிரியா உச்சியில் இருந்து சூரிய உதயத்தைக் காண அதிகாலை 5 மணிக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் அங்கு செல்லும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.