உள்நாட்டு செய்தி
புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்க சிகிச்சை பாரியளவு பாதிப்பு
புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை சேவை தற்போது பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அபெக்ஷா மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் தலா ஒரு கதிரியக்க சிகிச்சை இயந்திரமும், கண்டி தேசிய வைத்தியசாலையில் இரண்டு கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களும், பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சிகிச்சைகளுக்காக வருகை தரும் நோயாளர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.