உள்நாட்டு செய்தி
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் – சம்பந்தன் சந்திப்பு
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பிள்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை சந்தித்துள்ளார்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பிள்டன் தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், சமூக ஒற்றுமை, அரசியலமைப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் கடைப்பிடித்த அணுகுமுறைகள், மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.