உள்நாட்டு செய்தி
தொடருந்தில் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு
எல்ல ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில் யுவதியொருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கிதுல்எல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியென தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்திலேயே அவர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் சடலம் தெமோதரை தொடருந்து நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.