உள்நாட்டு செய்தி
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.700?
நேற்று (20) புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால், வரும் நாட்களில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை, 700 ரூபாயை தாண்டும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்தியா வெங்காய இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
மொத்த சந்தையில் உள்ளூர் வெங்காயம் வரத்து இல்லாததால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
இதேவேளை, நேற்று பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.