உள்நாட்டு செய்தி
இனி பாடசாலைகளில் கட்டாயமாகும் விடயம் – அதிபர்களுக்கு பிறக்கப்பட்டுள்ள உத்தரவு
பாடசாலை தவணை ஆரம்பித்து முதல் பதினைந்து நாட்களுக்குள் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆண்டின் தொடக்கத்தில், அந்தந்த தரங்களின் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வகுப்பாசிரியரால் மாணர்களுக்கு சில விளக்கங்கள் அளிக்கப்படும். இது மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய புரிதலை வழங்குகிறது. இதற்காக சுற்றறிக்கையை திருத்தியுள்ளோம்.பெப்ரவரி 19ம் திகதி துவங்கிய முதல் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் வகுப்புகள் வட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் இடையே நல்ல உறவைப் பேண முடியும்” என்றார்.
அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி முறையில் பல கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவித்தார்.