உள்நாட்டு செய்தி
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பதில் காவல்துறைமா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு!
பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான விடயங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறு பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அனைத்து பாடசாலை வளாகத்திலிருந்தும் 500 மீற்றருக்குள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அனைத்து விடயங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.