முக்கிய செய்தி
இலங்கையின் வருடாந்த இறப்புகளில் 80% தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகிறது
இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80% தொற்றாத நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35% பேர் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவினால் சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுவப்பட்ட உடல் ஆரோக்கிய பிரிவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற உடல் நலப் பிரிவுகளை நிறுவுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது