உள்நாட்டு செய்தி
தாயை கழுத்தறுத்து கொலை செய்த இளைய மகள் கைது..!
கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,
அவரது இளைய மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கஹவத்த – வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய தாயாவார்.
கைதுசெய்யப்பட்டவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 38 வயதுடைய உயிரிழந்தவரின் இளைய மகளாவார்.
இளைய மகள் தனது தாயின் கழுத்தை அறுத்து வீட்டின் பின்புறத்தில் சடலத்தை எடுத்து சென்று வீசிவிட்டு,
வீட்டினுள் சிந்தியிருந்த இரத்தத்தை துடைத்துவிட்டு காலை 11.40 மணியளவில் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் பிற்பகல் 3.40 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன் பின்னர் அயலவர்களிடம் தனது தாய் தாக்கப்பட்டு உயிரிழந்து சடலமாக கிடப்பதாக கூறி பொலிஸாருக்கு இளைய மகள் தகவல் வழங்கியிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில் உயிரிழந்த தாயிண் சடலத்திற்கு அருகிலிருந்து இளைய மகளின் கைக்கடிகாரம் மீ்ட்கப்பட்ட நிலையில் வெளியாட்களால் இந்த கொலை இடம்பெற்றிருக்க முடியாது என சந்தேகித்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.