உள்நாட்டு செய்தி
மீண்டும் தலைத் துாக்கும் யானைக்கால் நோய்!
புத்தளம் மாவட்டத்தில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் என சுகாதார பூச்சியியல் அதிகாரி புத்திக சமில தெரிவித்துள்ளார்.
ஜப்பான்ஜபரா, சல்வேனியா போன்ற தாவரங்கள் பெருகியதே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“யானைக்கால் நோயில் இரண்டு பகுதிகள் உள்ளன. கிராமப்புற யானைக்கால், நகர்ப்புற யானைக்கால் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறோம். கிராமப்புற யானைக்கால் நிலை முன்பு இருந்தே உள்ளது. இது ஜப்பான்ஜபரா மற்றும் சல்வேனியாவால் அடிக்கடி பரவுகிறது. பான்சோனியா என்ற நுளம்பு வகைகள் பரவுகின்றன. தற்போது 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கிராமப்புற யானைக்கால் நோயின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏரிகளில் ஜப்பான்ஜபரா, சல்வேனியாவை பார்க்கிறோம். அவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்த நுளம்புத்தொகையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. புத்தளம் மாவட்டத்தில் தற்சமயம் கிராமப்புற யானைக்கால் நோயே அதிகளவில் பதிவாகியுள்ளது” என்றார்.