உள்நாட்டு செய்தி
இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது…!
பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் உட்பட குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த இருவர் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகைளை கொள்வனவு செய்த இரு பெண்களும் ராகமை மற்றும் களனி பிரதேசங்களில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தாய் ராகமை பிரதேசத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்ததாகவும்,
இவர் ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.