உள்நாட்டு செய்தி
அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மேலதிக நேர சேவையிலிருந்து விலகி ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(07) தொடர்கின்றது.
மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டதை கண்டித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அபேக்ஷா வைத்திசாலையில் கதிரியக்க பிரிவு சேவைகள் இடம்பெறவில்லை.
மேலதிக நேர கொடுப்பனவை சுகாதார அமைச்சு குறைத்துள்ளதாகவும் இதனை கண்டிக்கும் வகையிலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கத்தின் பிரதம செயலாளர் தர்மகீர்த்தி ஏப்பா தெரிவித்துள்ளார்.