உள்நாட்டு செய்தி
இரட்டைக் குழந்தைகள் விற்பனை – கைதானவர்களுக்கு விளக்கமறியல்
பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பெண்களும் நாளை(8) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிறந்து 07 நாட்களேயான குழந்தைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், குறித்த குழந்தைகளின் தாய், குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.