Connect with us

முக்கிய செய்தி

இந்த ஆண்டு 34 தேயிலை ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு

Published

on

 

இலங்கையின் தேயிலை தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் 34 ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீட்டு விழா இன்று தலவத்துகொடயில் உள்ள Grand Monarch ஹோட்டலில் இடம்பெற்றது.

தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த தேயிலை 2023 தேசிய கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்.மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் பெருமளவிலான தேயிலை சம்பந்தப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் தேயிலை தொழில் தொடர்பான சில பிரச்சினைகளை இலக்காகக் கொண்ட 34 ஆய்வுகளின் கட்டுரைகள் இன்று வெளியிடப்பட்டன. தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இந்த ஆய்வுக் கட்டுரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் தேயிலை கைத்தொழிலை பெறுமதி சேர்ப்பு உற்பத்திச் செயற்பாடுகள் மற்றும் நல்ல விவசாய நடைமுறைகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது.

உலக தேயிலை சந்தையில் இலங்கை இரண்டாவது பெரிய வ விநியோகஸ்த்தர் . சிலோன் டீ வர்த்தக நாமத்தை உலக சந்தையில் மீண்டும் பிரபலமாக்குவதற்கு தேயிலை தொடர்பான உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சிந்தக லொகுஹெட்டி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.