Connect with us

உள்நாட்டு செய்தி

போலி டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கி வந்த பெண் கைது…!

Published

on

போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்து அதன் பணிப்பாளராக இருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிலையத்தை சுற்றிவளைத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை வழங்குவதாக,

முகநூலில் விளம்பரங்களை வெளியிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

சட்டப்பூர்வ அனுமதியின்றி ஒன்லைன் கல்விப் பட்டறைகளை நடத்தி கல்வி கற்பித்த பிறகு போலி டிப்ளோமா சான்றிதழ்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டில் அல்லது சர்வதேச ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட நியமங்கள் இன்றி இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருவதுடன்,

டிப்ளோமா பாடநெறி ஒன்றிற்கு, பாடத்தின் வகைக்கு ஏற்ப, 100,000 முதல் 4,45,000 ரூபாய் வரை பணம் வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான 43 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதிலும்,

அங்கீகாரம் இன்றியும், ஆணைக்குழுவின் பதிவின்றியும் போலியான முறையில் நடத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர் அந்த நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறித்த மோசடிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் பல்வேறு இலத்திரனியல் ஊடகங்களைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி,

உயர் கல்விக்கான விளம்பரங்களை வெளியிட்டு பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக இருந்த மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *