உள்நாட்டு செய்தி
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும்சாரதிகளுக்கான அறிவிப்பு..!
கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீதிகள் இருண்டு காணப்படுவதால், வாகனங்களின் முன்பக்க விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்குமாறு, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக் கொள்கின்றனர்.