Connect with us

முக்கிய செய்தி

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்க புதிய திட்டம்!

Published

on

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரையில் நேற்று (02) பிற்பகல் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர்,

“அதிக அளவில் வீதி விபத்துகள் நடக்கின்றன. இது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதுதான். எனவே விரைவில் தகுதியின்மையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான புள்ளிகளை குறைத்தல் மற்றும் செய்து ரத்து செய்யும் முறையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்” என்றார்.