முக்கிய செய்தி
சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி
சில பொருட்களுக்கு விசேட பண்ட வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய நேற்று முதல் இந்த விசேட பண்ட வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் இந்த வரி அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், தோடம்பழம், அப்பிள், பெரிய வெங்காயம், செமன் மற்றும் நெத்தலி உள்ளிட்ட பொருட்களுக்கு இவ்வாறு விசேட பண்ட வரி அறவிடப்பட்டுள்ளது.