முக்கிய செய்தி
WHO இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாக உறுதி
சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பிரதிநிதி வைத்தியர் லகா சிங்கிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
1. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் திட்டங்களுக்கு ஆதரவு.
2. நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் எதிர்ப்பைத் தடுப்பதற்கான ஆதரவு.
3. அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுகாதாரக் கொள்கைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான தரவுகளை வழங்குதல்.
4. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஊழியர்களுக்கான பகுப்பாய்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு.