உள்நாட்டு செய்தி
வீதியை கடக்க முற்பட்ட பெண் காரில் மோதி உயிரிழப்பு
காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (29.11.2023) காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்த ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு உயிரிழந்த பெண்ணின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.