உள்நாட்டு செய்தி
பசறை பிரதேசத்தில் இன்றுஒருகொரோனா தொற்றாளர்

பசறை பிரதேசத்தில் இன்று (13) கொரோனா தொற்றாளர் ஒருவர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி கொழும்பிலிருந்து வருகை தந்த 59 வயதுடைய கோணக்கலை பிளார்னிவத்த தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளார்.