உள்நாட்டு செய்தி
தேரர் தாக்கியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் !
தேரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தெனியாய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.பொலிஸ் கான்ஸ்டபிள் மேலதிக சிகிச்சைகளுக்காக காலி – கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்கு சென்றிருந்த போதே தனிப்பட்ட காரணத்தினால் தேரர் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.18 வயதான தேரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.37 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.