உள்நாட்டு செய்தி
துபாய்க்கு 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவர் கைது..!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) துபாய்க்கு சுற்றுலா விசா மூலம் 6 பெண்களை வேலைக்காக அனுப்ப முயன்ற இருவரை கைது செய்தது.இதன்படி, மாத்தறை வெலேகொட மற்றும் மிஹிந்தலை அசோகபுர ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.