முக்கிய செய்தி
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை நுழைந்த பெண் கைது
போலியான கடவுச்சீட்டுடன் இலங்கைக்குள் பிரவேசித்த ஈரானிய பெண் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (13.11.2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.53 வயதான பெண் ஒருவரே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவுக்கு ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக குடிவரவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குற்றப்புலனாய்வு துறை விசாரணைசந்தேகநபர் இலங்கைக்குள் பிரவேசிக்க பயன்படுத்திய ஆஸ்திரிய கடவுச்சீட்டை பரிசோதனை செய்தவுடன் அது போலியானது என கண்டறிப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நாட்டிற்கு வந்திருந்த குறித்த பெண் தனது கடவுச்சீட்டில் கொழும்பில் இருந்து பெறப்பட்ட இந்திய வீசாவை ஒட்டிய நிலையில் இன்று இந்தியா செல்ல முயற்சித்துள்ளார்.இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.