உள்நாட்டு செய்தி
பல வைத்தியசாலைகள் பூட்டு வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்வாறு 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள்அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சி போக்கிற்கு செல்லும்.எனவே, அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியர்களின் தேவைப்பாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.