முக்கிய செய்தி
100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருட்டு விசாரணை ஆரம்பம்….!
.
குருணாகல் மாவட்டத்தில் உள்ள 04 அரச களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் காணாமற்போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கைக்கு அமைய, 2021 -2022 ஆம் ஆண்டுகளில் குருணாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, ஆணமடுவ, நிக்கவரெட்டிய மற்றும் மஹவ களஞ்சியசாலைகளில் இருந்து 09,71,050 கிலோகிராம் நெல் காணாமற்போயுள்ளது. இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாவாகும்.இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 05 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல் காணாமற்போனமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள களஞ்சியசாலைகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.