உள்நாட்டு செய்தி
தபால் ஊழியர்கள் இன்று இரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தம்
இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணி (UPTUF) தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.