உள்நாட்டு செய்தி
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (05.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவுமேலும் தெரிவிக்கையில், பண்டிகை காலத்தில் அதிகளவிலான பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை அதிகரிக்காமல், தற்போதைய விலை மட்டத்தில் அல்லது அதனை விட குறைந்த விலையில் வைத்து கொள்வதற்கான வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கைஇதேவேளை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.மேலும் அண்மையில் சதொசவில் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.