முக்கிய செய்தி
இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை அத்தியாவசியம்: ஜனாதிபதி
இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல, அது அத்தியாவசியமான தேவை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் முதல் கட்டமாக கல்வித்துறையில் மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஒரு நாடாக தொழில்நுட்பத் துறையில் முன்னேற்றம் அடைய சிறிது காலம் தேவைப்படுவதாகவும், கல்வி மற்றும் சந்தை மூலோபாயம் ஆகிய துறைகளில் உள்ள சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான ஆதரவை வழங்குமாறும் ரணில் விக்ரமசிங்க பங்குதாரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.