உள்நாட்டு செய்தி
சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் கைது

யாழ்ப்பாணம் – குருநகர் கடல்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (5.11.2023) காலை கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்வள திணைக்களத்திற்கு கொண்டு வந்த பின்னர், நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.