முக்கிய செய்தி
யாழில் 135 பவுண் நகைகள் கொள்ளை:
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில் – மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இன்று (05.11.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருட்டுச் சம்பவம்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த வீட்டில் இன்று அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் கையடக்க தொலைபேசியைக் காணாது தேடிய பொழுது அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
பின்னர் நகைகளைப் பார்த்த போதே நகைகள் திருட்டுப் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைசம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை அந்தக் குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.