Connect with us

முக்கிய செய்தி

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Published

on

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி

மேலும், பொதி செய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 330 ரூபாவாகும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லரை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் | Maximum Retail Price Set For Sugar

அதன்படி, இந்த விலைகள் இன்று (03.11.2023) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.