உள்நாட்டு செய்தி
சாரதி அனுமதிப் பத்திரத்திலும் QR குறியீடு…!
சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம்,
அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரச் சரிவின் காரணமாக, சிப் ரீடிங் யூனிட்களை இறக்குமதி செய்வது கடினமாக உள்ளது, எனவே சாரதி அட்டைகளின் தகவலைப் படிக்க வசதியாக QR ஆனது குறைக்கடத்தி சிப் மூலம் மாற்றப்படுகிறது.
மோட்டார் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறைக்கு மட்டுமே இந்த QR குறியீடுகள் குறித்த தகவல்களைப் படிக்க தனி மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதி அட்டைகளில் போக்குவரத்து விதி மீறல்களுக்கான டிமெரிட் புள்ளிகள் அமைப்பு இணைக்கப்படும் என்றும்,
குறைந்தபட்சம் பாதி தேவைகளுக்கு அட்டைகளை வழங்கப்பட்டு முடிந்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.