உள்நாட்டு செய்தி
ராமேஸ்வர கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள உண்ணாவிரத போராட்டம்
எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்டதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து படகையும் அதிலிருந்த 37 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்தும் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வர கடற்தொழிலாளர்களால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மண்டபம் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை தொடருந்தை மறித்து போராட்டம் நடத்த கடற்தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை கூட்டம்மேலும், நவம்பர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் கடற்தொழிலாளர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.