உள்நாட்டு செய்தி
ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிக்கை
பத்தரமுல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை (24) அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் காயமடைந்தமை குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கவலை தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே போராட்டம் குறித்த அமைச்சரின் நிலைப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக கல்வி அமைச்சர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த வேளையில், கல்வித்துறையில் தமக்குள்ள பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தீர்க்கும் விதமாக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த ஏனையோர் ஒன்றிணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பலர் காயமடைந்தமை குறித்து கல்வி அமைச்சர் கவலையடைவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.