முக்கிய செய்தி
LIOC இன் பெற்றோலிய உரிமம் 20 ஆண்டுகளுக்கு புதுப்பிப்பு
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு (LIOC) அரசாங்கத்தால் பெற்றோலியப் பொருட்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் துணை நிறுவனம் இலங்கையில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 20 ஆண்டுகளுக்கு தொடர அனுமதித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட உரிமம் ஜனவரி 22, 2024 முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.LIOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், கொழும்பு பங்குச் சந்தையின் தலைமை ஒழுங்குமுறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.