முக்கிய செய்தி
மனைவியை கொலை செய்து புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணை கணவன் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று (24)சடலம் மீட்கப்பட்டுள்ளது.மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணைஇந்த சம்பவத்தினை செய்த கணவன் கொழும்பு பகுதியில் வைத்து நேற்று(24)முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து புதைக்கப்பட்ட குடும்ப பெண்ணின் உடலம் மீட்ககப்பட்டு முல்லைதீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.பிரத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் பெண்ணின் களுத்தில் அடி விழுந்த காரணத்தினால் பெண் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குடும்ப பிரச்சினை அவ்வப்போது இடம்பெற்று வந்துள்ள நிலையில் இருவரும் தாக்கியுள்ளார்கள். இதன்போது கணவன் மனைவியின் கழுத்தில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுஅதன் பின்னர் உடலத்தினை யாருக்கும் தெரியாமல் மலசலகூடத்திற்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டுள்ளதாக கொலைக் குற்றவாளியின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்த பெண்ணின் உடலம் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,கைதுசெய்யப்பட்ட கணவன் இன்று (25.10.2023)முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.