உலகம்
ஐ.நா பொதுச்செயலாளருக்கு எதிராக இஸ்ரேல் போர்க்கொடி: பதவி விலகுமாறு வலியுறுத்து!
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
குறித்த அமைப்பை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குட்டெரெஸுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பையும் அவர் இரத்துச் செய்துள்ளார். இதனையடுத்து ஹமாஸிற்குக் கண்டனம் தெரிவித்த குட்டெரஸ், காசாவில் அனைத்துலகச் சட்டம் மீறப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
காசா குடியிருப்பாளர்களைத் தென்பகுதிக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டுப் பின்னர் அதே பகுதியில் இஸ்ரேல் வெடிகுண்டு வீசியதை அவர் சாடினார்.
அதில் பேசிய ஐக்கிய நாடுகள் ஸ்தபனத்தின் தலைமைச் செயலாளர் குட்டெரஸ் இஸ்ரேலிலும் காசாவிலும் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.