முக்கிய செய்தி
கிழக்கிலுள்ள சிங்களவர்கள் வெளியேற்றம்?
கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக பௌத்த குருமார்கள் தன்னையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறி கொண்டு செயற்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்ளை கைப்பற்றினால் அது எந்த இனத்தவர்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்நாட்டில் மீண்டும் ஒருமுறை இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.