Connect with us

Sports

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி

Published

on

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

நெதர்லாந்து அணி நிர்ணயித்த 262 ஓட்டங்களை கடந்ததன் மூலம் இந்த வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இதன்படி இன்றைய போட்டியில்(21.10.2023) இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 70 ஓட்டங்களையும், லோகன் வென் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி | Ned Vs Sl Head To Head News Update

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 48 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 50 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், இலங்கை அணி 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *